கிறிஸ் கெய்ல் பெட்டையும் சிக்ஸருக்கு பறக்க விடுவாரு.. கையில் பேட்டின் கைபிடி இருக்க, மற்றைய துண்டு உடைந்து பறந்தது. சி.பி.எல் தொடரின் அரையிறுதியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

விளையாட்டு

கிறிஸ் கெய்ல்…

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தனது பேட்டை உடைத்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரை போன்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் முதலாவது அரையிறுதி போட்டியில் கயானா அமேசன் வோரியர்ஸ் – சென் கைட்ஸ் அண்ட் நேவிஸ் பெட்டோரியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் சென் கைட்ஸ் அண்ட் நேவிஸ் பெட்டோரியஸ் அணிக்காக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் நான்காவது ஓவரின் போது தனது பேட்டை உடைத்தார்.

அதாவது எதிரணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒடென் ஸ்மித் வீசிய பந்துவீச்சில் அவர் ஓங்கி அ டிக்க முயன்ற போது அவரின் பேட் உடைந்து இரண்டு துண்டாவது. பேட்டின் கைபிடியானது கிறிஸ் கெய்லின் கையில் இருக்க மற்றைய துண்டு பறந்து போனது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *