அன்று பொல்லார்ட் செய்த நா சகார செயலுக்கு 4 ஆண்டுகளின் பின்னர் பதிலடி கொடுத்த எவின் லூவிஸ்.. இது சாதாரண பதிலடி அல்ல, வரலாறு பேசும் பதிலடியாகும்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரை போன்று மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் அண்மையில் இடம்பெற்ற முக்கியமான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பட்ரியட்ஸ் அணியின் ஆரம்ப வீரரான எவின் லூயிஸ் அ டித்த சதம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் சதமாக மாறியிருக்கிறது.

டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரான பொல்லார்ட்டுக்கு எதிராக அ டித்த சதமாகவே குறித்த சதம் பேசப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் 31 பந்துகளில் 97 ஓட்டங்களை லூயிஸ் பெற்றிருந்த போது, அவரை சதம் அ டிக்க விடாமல் சர்ச்சைக்குரிய நோ பால் ஒன்றை பொல்லாரட் வீசினார். அதன் பின்னர் இவன் லூயிஸ் இதுவரைக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் சதம் எதனையும் பெறமுடியாமல் போயிருந்தது.

நான்கு ஆண்டுகள் காத்திருந்து, அதே பொல்லார்ட் தலைமை தாங்குகின்ற பரின்பேக் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 11 சிக்சர்கள் அடங்கலாக லூயிஸ் சதம் அ டித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியில் 160 எனும் இலக்குடன் ஆடிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பட்ரியட்ஸ் அணியினர் 32 பந்துகளில் மீதமிருக்கிற போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பின்னர் கருத்து தெரிவித்திருந்த லூயிஸ், அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்ததோடு தனக்கு அந்த சம்பவம் மிகப் பெரும் கா யத்தை ஏற்படுத்தியதாகவும், இப்போது கரிபியன் பிரீமியர் லீக்கில் முதல் சதம் அ டித்து இருப்பதாகவும் பெருமைப்பட்டார். நான்கு ஆண்டுகள் காத்திருந்து தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் எவின் லுயிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *