இலங்கை அணி பார்த்த வேலையால் தல டோனியின் சாதனை பறந்தது.. டி20 போட்டியில் டோனியின் சாதனையை முறியடித்த குயின்டன் டி கொக்

விளையாட்டு

குயின்டன் டி கொக்…

தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக் இருபதுக்கு 20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையில் நடைபெற்ற 3வது டி20 சர்வதேசப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இலங்கை அணியை சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்து இருக்கிறது.

மூன்றாவது போட்டியில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முழுமையாக துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை குவித்தது. தென் ஆபிரிக்க அணியை பொறுத்தவரையில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 120 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையானது மிக குறைவான ஓட்ட எண்ணிக்கை ஆகவே காணப்பட்டது.

எனவே மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் எந்த ஒரு விக்கெட்களையும் இழக்காமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிக் கொண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை 3-0 என்ற அடிப்படையில் எதிரணியின் சொந்த மண்ணில் இலங்கை அணியை சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்துள்ளது.

தொடரின் ஆட்டநாயகனாக அடுத்தடுத்து இரு அரைச்சதங்களை விளாசிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் தெரிவானார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் எம்.எஸ். டோனியின் சாதனையை முறியடித்தார்.

Most runs in T20Is as wicket keeper:

1918 – Mohammad Shahzad
1763 – Jos Buttler
1745 – Q de kock
1617 – MS Dhoni
1382 – Kumar Sangakkara

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *