‘எனது அப்பா மஹிந்தவும் கூட மாலிங்கவை டி20 உலகக்கிண்ணத்தில் எதிர்பார்த்தார்.. நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.. ஆனா கடைசில நடந்தது இதுதான்’ – நாமல் ராஜபக்ஷ வெளிப்படையான பேச்சு

விளையாட்டு

நாமல் ராஜபக்ஷ…

லசித் மாலிங்க கடந்த 2004ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமானதில் இருந்து இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளதுடன், பல சாதனைகளுக்கும் சொந்தக்காரராக மாறியிருக்கிறார். ஐ.பி.எல் தொடரில் அன்றிலிருந்து, இறுதிவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க இறுதிவரை அந்த அணியில் ஒரு சாதனையாளராகவே மாறியிருந்தார். கடந்த சில ஆண்டுக்காக அதிக உடற்பருமன் பிரச்சினை காரணமாக காரணமாக இலங்கை அணியில் லசித் மாலிங்கவின் இடம் கேள்விக்குறியானது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு செய்தியினை அறிவித்தார். அதன் பின்னர் இலங்கை அணியில் மீண்டும் லசித் மாலிங்க களமிறங்கி விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். லசித் மாலிங்கவும் தான் மீண்டும் இலங்கை அணியில் விளையாட தயாராக இருந்தார்.

அதன் படி இந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் லசித் மாலிங்கவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இலங்கை அணியின் உலகக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டது. இதில் மாலிங்கவுக்கு இடமே கிடைக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்த நிலையில் இணையதளம் ஒன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டி ஒன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, லசித் மலிங்கா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு அணியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென தான் விரும்பியதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இலங்கை தேர்வு குழுவும் கிரிக்கெட் கமிட்டியும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்ததாகவும் அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை எனும் கருத்து லசித் மலிங்க தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக தன்னுடைய தந்தையார் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றும் தனக்கு மிகவும் பிடித்தமான இலங்கை வீரர் லசித் மலிங்க என்கிற கருத்தையும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

39 வயதாகும் லசித் மலிங்க ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், டி20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுகின்ற எத்தனிப்பில் இதுவரைக்கும் ஓய்வு பெறாமல் இருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *