எதிர்கால நம்பர் 1 பவுலர் வனிந்து ஹசரங்கவுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தீர்களா.. கோலி, ஏ.பி.டி வில்லியர்ஸ் தலைவணங்கி, கை கொடுத்து வரவேற்பு – வீடியோ உள்ளே

விளையாட்டு

வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற இருபதுக்கு இருபது லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் பிரபலமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது. இதுவரையில் 13 தொடர்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் 14வது தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமானது.

தொடரின் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடரானது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நான்கு மாதங்களின் பின்னர் ஐபிஎல் தொடர் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் எந்தவொரு இலங்கை வீரர்களும் இடம் பெறாத நிலையில்,

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இலங்கையை சேர்ந்த 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர ஆகிய இரண்டு வீரர்களும் விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளனர். குறித்த இரண்டு இலங்கை வீரர்களும்,

தென்ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற டி20 தொடரை முடித்துக்கொண்டு பெங்களூரு அணியில் இணைவதற்காக துபாய் நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு இலங்கை அணியின் இரண்டு வீரர்களும் தங்களுடைய தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து கொண்டு பெங்களூர் அணியில் இணைந்து கொண்டனர். இதன்போது இலங்கை அணி வீரர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்திய அணியின் தலைவரும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவருமான விராத் கோலி மற்றும் அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் வனிந்து ஹசரங்கவை கை கொடுத்து வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *