டோனியின் ஆலோசகர் பதவிக்கு வெச்சான் பாரு ஆப்பு.. பி.சி.சி.ஐ-க்கு வந்த கடிதம் – அடேய் குப்தா. யார்ரா நீ !!

விளையாட்டு

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக்ககிண்ண

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக்ககிண்ண தொடருக்கான இந்திய அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.எஸ். டோனி, குறித்த பதவியில் செயல்படுவதில் புதிய சிக் கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமாக சி.எஸ்.கே அணியின் தலைமை பதவியே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான 15 வீரர்கள், 3 மேலதிக வீரர்கள் கொண்ட இந்திய அணியின் குழாம் கடந்த புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் அறிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த உலகக்கிண்ண தொடரின் போது இந்திய அணியின் வழிகாட்டியாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். நியமிக்கப்பட்டார். யாரும் எதிர்பாராத நிலையில் இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்;தது. இந்நிலையில் அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச கிரிக்கெட் சபையின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய அணியின் வழிகாட்டியாக டோனி செயற்படுவதை நிறுத்த வேண்டும். அந்த முடிவை கைவிட வேண்டும். ஏனென்றால் டோனி ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

எனவே உத்தரவை இரத்து செய்யுங்கள் எனக்கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதிமுறைகளில் 38 (4) இன் படி ஒருவர் ஒரே நேரத்தில் இரு பதவிகளை வகிக்கக்கூடாது. டோனி சி.எஸ்.கே அணியின் தலைவராகவும், இந்திய அணியின் வழிகாட்டியாகவும் செயற்பட முடியாது. எனவே இதனை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சஞ்சீவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *