‘2008ஆம் ஆண்டு தாக் குதலில் இங்கிலாந்து அணியும், நிர்வாகமும் செய்த செயலை மனதில் வைத்து செயற்பட வேண்டும்’ – பி.சி.சி.ஐ க்கு நினைவூட்டிய கவாஸ்கர் (உங்க மனசு வெள்ளை சேர்)

விளையாட்டு

2008 மும்பை தா க்குத லுக்குப்பின் இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடந்து கொண்ட விதத்தை மறந்துவிடக்கூடாது. அதை மனதில் வைத்து இந்திய அணி நிர்வாகம் செயற்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கொ ரோ னா வை ர ஸ் தொற் று காரணமாக இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு இந்திய வீரர்கள் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டனர்.

இந்த டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியை எப்போது நடத்தலாம் என்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘கடந்த 2008 நவம்பர் 26ஆம் திகதி மும்பையில் தீ விரவாதிகள் தாக் குதல் நடத்தினர். தாக் குதல் நடத்திய அன்று கட்டாக்கில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது.

இந்தத் தாக்குதலுக்குப்பின் இங்கிலாந்து அணி தாயகம் புறப்பட்டனர்.’ ஆனால் பாதுகாப்பு சூழல் கருதி டெஸ்ட் தொடரை விளையாடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியினர் மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடினர். இந்த சம்பவத்தில் கெவின் பீட்டர்ஸன் தலைமையிலான இங்கிலாந்து அணியை ஒருபோதும் மறக்க முடியாது.

பீட்டர்ஸன் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம், நான் இந்தியா செல்ல முடியாது, பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்திருந்தால், அனைத்தும் முடிந்திருக்கும். ஆனால் பீட்டர்ஸன் இந்தியாவுக்கு செல்ல விரும்பினார், மற்ற வீரர்களையும் சமாதானப்படுத்தி தொடருக்கு தயாராக்கினார். இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஆதலால், இங்கிலாந்து அணி செய்ததை மறந்துவிடாமல் நாமும் ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும். எனவே இங்கிலாந்து அணியும், நிர்வாகமும் செய்த செயலை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் செயற்பட வேண்டும். ஐ.பி.எல் முடிந்தபின் இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரை முடிக்கலாம்.

இந்த விடயத்தில் இரு அணி நிர்வாகத்தினரும் நட்புணர்வோடு செயற்பட வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *