ஒரே நாளுக்குள் எல்லாம் காலி.. வெளியான அறிவிப்பால் ம ன வே த னை ப் ப டு ம் இந்திய, ஆஸி. இரசிகர்கள்

விளையாட்டு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுற்றுலா இந்திய அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், மூன்று இருபதுக்கு இருபது மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய மூவகையான தொடர்களில் ஆடவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளானது இரசிகர்கள் இன்றிய மூடிய மைதானத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது போட்டிகளுக்கு 50 சதவீத இரசிகர்கள் அனுமதிப்பது அன முடிவு செய்தது.

இதன் அடிப்படையில் இந்திய – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமானது.

மொத்தமாக 6 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான டிக்கெட்களில் ஒரே நாளுக்குள் முதல் ஒருநாள் போட்டி தவிந்த எஞ்சிய 5 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது ஒருநாள் போட்டிக்கு மட்டும் இன்னும் சுமார் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறித்த போட்டிகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *