‘இந்த வருஷம் வெறும் 20 லட்சம் தான்.. 2022 ஐ.பி.எல் ஏலத்தில் இவர் நிச்சயம் 14 கோடி வரை ஏலம் போவார்’ இளம் வீரரை தாறுமாறாக புகழ்ந்து பேசிய மஞ்ரேக்கர்

விளையாட்டு

தற்போது நடைபெற்றுவரும் 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பல ஐபிஎல் அணிகளை சேர்ந்த பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் ஒருசில இளம் வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் 12 கோடி முதல் 14 கோடி வரை ஏலம் போவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் பங்கேற்கும் என்றும் அதற்கு முன்னர் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் புதிய வீரர்கள் கலந்து கொள்வது மட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று தெரிகிறது. 

அந்த வகையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் 12 முதல் 14 கோடி வரை ஏலம் போவார். ஏனெனில் அவரது பேட்டிங் ஏதோ ப்ளுக்கில் வந்தது கிடையாது. அவரது முதல் தர கிரிக்கெட்டை பார்த்தாலும் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பது தெரிகிறது.

 பேட்டிங்கில் அதிரடி காண்பிக்கும் வெங்கடேஷ் ஐயர் பவுலிங்கிலும் அசத்தலாக பந்து வீசி வருகிறார். நிச்சயம் பவுலிங்கிலும் அவர் சிறப்பான செயற்பாட்டினை வெளிப்படுத்தி அசத்துவார் என்பதை நம்பலாம். எனவே நிச்சயம் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் 12 முதல் 14 கோடி வரை ஏலம் போவார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். 

இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய வெங்கடேஷ் ஐயர் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 144 ஸ்ட்ரைக் ரேட் உடன் 126 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *