டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த டாப் 5 வீரர்கள் பட்டியல் ! கெத்தாக நிற்கும் இலங்கை வீரர்கள். மஹேலவுக்கு ஒரு லைக்

விளையாட்டு

இருபதுக்கு 20 போட்டிகள் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையானது கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி இருபது-20 உலக கிண்ணத் தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரையில் ஆறு இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 7வது 20 டி20 சர்வதேச கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. 

இவ்வாறான நிலையில் இதுவரையில் நடைபெற்றுள்ள இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலை அடுத்து பார்க்கலாம். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன 1016 ஓட்டங்களை குவித்து அதிக ஓட்டங்களை குவித்த வீரராக காணப்படுகிறார்.

மேலும் ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களை கடந்த ஒரே ஒரு வீரராக மஹேல ஜயவர்த்தன சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மஹேல ஜெயவர்தனவுக்கு அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான கிறிஸ் கெயில் 920 ஓட்டங்களை குவித்து இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.

மூன்றாவது இடத்தில் மீண்டும் இலங்கை வீரர் காணப்படுகிறார். இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திலகரட்ண டில்ஷான் 897 ஓட்டங்களைக் குவித்து இவ்வாறு மூன்றாமிடத்தில் காணப்படுகிறார். 4வது இடத்தில் தான் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி காணப்படுகிறார். அவர் 777 ஓட்டங்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களிலுள்ள வீரர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

Most Runs in T20 World Cup:-

1016 – Mahela Jayawardene

 920 – Chris Gayle

 897 – Tillakaratne Dilshan

 777 – Virat Kohli

 717 – Ab de Villiers

 673 – Rohit Sharma

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *