ஹர்ஷா போக்ளே தெரிவுசெய்த 2021 சிறந்த ஐ.பி.எல் அணி.. டீமை பார்த்து ஷாக் ஆன ஸ்ரீ லங்கா ரசிகர்கள்

விளையாட்டு

ஹர்ஷா போக்ளே.

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை (2009, 2010, 2018, 2021) கோப்பையை கைப்பற்றிய அணியாக வலம் வருகிறது. ஒவ்வொரு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன், அந்த தொடர் முழுக்க சிறப்பாக விளையாடிய பதினோரு வீரர்களை கொண்ட அணியை கிரிக்கெட் வல்லுனர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அதன்படி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகுளே தேர்ந்தெடுத்துள்ளார். ஓபனிங் வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் ருத்துராஜ் இருக்கின்றனர். மிடில் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சன், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மையர் உள்ளனர்.

ராஜஸ்தான் அணியில் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடிய ஒரே வீரர் சஞ்சு சாம்சன் மட்டுமே. ஆல்ரவுண்டர் வீரர்களாக ரவீந்திர ஜடேஜா, ஜேசன் ஹோல்டர் மற்றும் சுனில் நரைன் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் ஆக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் மற்றும் வருன் சக்ரவர்த்தி உள்ளனர். பெங்களூரு அணியில் விளையாடிய ஹர்ஷால் பட்டேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் தொப்பியை கைப்பற்றினார்.

இதில் இலங்கை வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் சொதப்பியதால் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஹர்ஷ போகுளே தேர்ந்தெடுத்துள்ள 11 சிறந்த வீரர்களை கொண்ட அணி
கே எல் ராகுல், ருத்துராஜ், சஞ்சு சாம்சன், கிளன் மேக்ஸ்வெல், சிம்ரோன் ஹெட்மையர், ரவீந்திர ஜடேஜா, ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் மற்றும் வருன் சக்ரவர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *