திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. 2022 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியின் முதல் தக்கவைக்கப்பட்ட வீரர் அறிவிப்பு

விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல் தக்கவைக்கப்பட்ட வீரர்

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 15ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில் எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பினானது இதன் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4வது தடவையாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன.

இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவீர்களா என டோனியிடம் கேட்டபோது அவர், பி.சி.சி.ஐ. மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை பொறுத்து என்னுடைய ஐ.பி.எல். எதிர்காலம் அமையும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்று நேற்று முன்தினம் அறிவித்ததுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த அறிவிப்பின் மூலம் டோனி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரியவந்துள்ளது. டோனி சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *