டி20 உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றிகள், அதிக தடவைகள் பைனல் போன அணி என பல சாதனைகளுடன் கெத்தாக களமிறங்கும் இலங்கை அணி.. (இருக்குற ரெக்கோர்ட்ட பாத்த கப்பு நமக்குத்தான்)

விளையாட்டு

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இலங்கை அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணியாக காணப்படுகிறது. மேலும் 3 தடவைகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற ஒரே அணியாகவும் இலங்கை அணி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இலங்கை அணியை பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாக இருபதுக்கு 20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக பிரகாசிக்கவில்லை. முக்கிய வீரர்களின் ஓய்வைத் தொடர்ந்து இலங்கை அணி ஆதாள பாதாளத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. இருபதுக்கு 20 போட்டிகளுக்கு ஒரு நிலையான அணித்தலைவர் இல்லாமல் இலங்கை அணி தடுமாறியது.

எனினும் தற்போது இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அணி இருபதுக்கு 20 போட்டிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகளையும் பெற்றிருக்கின்றது. இலங்கை அணி கடந்த காலங்களில் பெற்ற தோல்விகளின் பிரதிபலிப்பாகவே தற்போது இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஒரு அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடும் முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *