டெஸ்ட் தொடரை விட தன் மகனை கையில் ஏந்துவதையே விரும்புகிறார். கோஹ்லி எப்படி இந்தியா செல்ல போகிறார் தெரியுமா? பிரபல வீரரின் வித்தியாசமான கருத்து

விளையாட்டு

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்புவது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் உப தலைவர் ரோஹிட் ஷர்மா இடம்பெறவில்லை.

இதேபோன்று டெஸ்ட் தொடரில் இறுதி மூன்று போட்டிகளில் அணித்தலைவர் விராட் கோஹ்லி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோஹ்லி இந்தியா திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ்,

விராட் கோஹ்லி டெஸ்ட் தொடரை விட தன் மகனை கையில் ஏந்துவதையே விரும்புகிறார். அதை நான் மதிக்கிறேன். ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி நினைத்த நேரத்தில் வரமுடியாது.

ஆனால் இப்போது ஒரு வீரர் ஒரு விமானத்தையே வாங்கி குடும்பத்தோடு செல்ல முடியும். கவாஸ்கர் தனது மகன் பிறந்த போது அவரை பல மாதங்களுக்குப் பார்க்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *