கோஹ்லிப் படையின் அவுஸ்திரேலியா தொடர் எப்போது ஆரம்பமாகும். எத்தனை மணிக்கு, எங்கே நடைபெறும்.. முழு அட்டவணையும் உள்ளே !

விளையாட்டு

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் போட்டிகளிலிருந்து விலகி இருந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து கிரிக்கெடை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடை நிறுத்தப்பட்டது.

இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது.

ஒருநாள் போட்டிகள்
நவம்பர் 27: முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். நேரம் 9:10
நவம்பர் 29: இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். நேரம் 9:10
டிசம்பர் 2: மூன்றாவது ஒருநாள் போட்டி கேன்பெராவில் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும், நேரம் 9:10

டி20 போட்டிகள்
டிசம்பர் 4: முதல் டி20, கேன்பெராவில் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும், நேரம் 1:40
டிசம்பர் 6: இரண்டாவது டி20, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், நேரம் 1:40
டிசம்பர் 8: மூன்றாவது டி20, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், நேரம் 1:40
டெஸ்ட் போட்டிகள்

டிசம்பர் 17-21: அடிலெய்ட் ஓவலில் முதலாவது டெஸ்ட் நடைபெறும். நேரம் காலை 9:30 மணி
டிசம்பர் 26-30: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட். நேரம் காலை 9:30 மணி.
ஜனவரி 7-11: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட். நேரம் 9:30
ஜனவரி 15-19: பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் நான்காவது டெஸ்ட், 9: 30

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *