கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்த ரோஹிட்டுக்கு வெச்சான் பாரு ஆப்பு.. இன்னும் ஐந்து நாட்களே கால அவகாசமாம்

விளையாட்டு

இன்னும் ஐந்து நாட்கள்: இல்லையெனில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மாவுக்கு கஷ்டம்தான்

இந்தியாவில் பெங்கள10ர் தேசிய கிரிக்கெட் அகடமியில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டுவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா மற்றும் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இன்னும் ஐந்து நாட்களுக்குள் அவுஸ்திரேலியா புறப்படவில்லை எனில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது. அவுஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டினர் 14 நாட்கள் தனிமைப்படுத்த்ல் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

அதன் பிரகாரம் இந்திய அணியினர் தனிமைப்படுத்தலில் இருந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உபாதை காரணமாக அவுஸ்திரேலியா செல்லவில்லை.

இருந்தும் இருவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் குறித்த தொடக்கான உடல்தகுதி பயிற்சியை இருவரும் தொடங்கியுள்ளனர். உடற்தகுதி பெற்றுவிட்டால் உடனடியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுவிடுவார்கள்.

ஆனால், இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் இருவரும் அவுஸ்திரேலியா புறப்படவில்லை எனில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவிசாஸ்திரி கூறுகையில் ”பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்கள் இருவரும் சில பரிசோதனைகளுக்காக சென்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் இடைவெளி தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ரோஹிட் சர்மா அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால், அதன் கடினமானதாகிவிடும். ஏனென்றால், தனிமைப்படுத்தல் இருப்பதால் அவர்கள் டெஸ்ட் போட்டிகள் தொடங்கும்போது வந்தால் அது உண்மையிலேயே கஷ்டமாகிவிடும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *