ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ஒருவருக்கு கொரோனா! என்ன செய்ய போகிறது பிசிசிஐ???

விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய வீரர்கள் தாயகம் திரும்பாமல், நேரடியாக ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட், ஒருநாள் மட்டும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளனர். இதற்காக இந்திய அணி பயிற்சியாளர்கள், ஊழியர்கள் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.

அதற்குமுன், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு ஊழியருக்குத் கோரோணா தொற்று உறுதி செய்யப்பட்டதால், உடனே அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.


இதுகுறித்து பிசிசிஐ சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் 14 நாள்கள் தனிமை முகாமில் உள்ளார். மீண்டும் தொற்று உறுதியாகாத பட்சத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் இணைந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பௌலிங் கோச் பரத் அருண், பேட்டிங் கோச் விக்ரம் ரதோர், பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் துபாய் சென்றடைந்து தனிமை முகாமில் உள்ளனர். ஐபிஎல் தொடரில் விளையாடாத சத்தேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் முன்கூட்டியே துபாய் சென்றுவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *