யாரும் செய்யாத சாதனையை செய்து காட்டிய நியூசிலாந்து அவுஸ்ரேலியா!! நிரம்பி வழியும் ரசிகர்கள்!

விளையாட்டு

தொற்றுநோய் காரணமாக தடைப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது ஆரம்பித்து சூடுபிடித்துள்ளது அதிலும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய அணி டெஸ்ட் போட்டி ஒருநாள் போட்டி டி20 போட்டி என முத்தரப்பு கிரிக்கெட்டில் அம் அவுஸ்திரேலியாவின் எதிர்த்து அட உள்ளது அதில் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது இதில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக 375 ஓட்டங்களை இந்திய அணிக்கு வழங்கியுள்ளது.

இதேபோன்று நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்தை எதிர்த்து 3 டி20 போட்டிகளிலும் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ள நிலையில் இன்று ஆக்லாந்து மைதானத்தில் ஆரம்பமான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேகிந்திய தீவுகள் அணி 16 ஓவர்கள் முடிவில் 180 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டை இழந்தது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி வெற்றி இலக்கினை இலகுவாக 5 விக்கெட்களை இழந்து பெற்றுக்கொண்டது இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 ரீதியில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இன்று ஒரு சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது நியூசிலாந்து அவுஸ்திரேலியா இணை பார்த்து ஏனைய நாடுகள் வாயில் கை வைக்கும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது கடந்த ஐபிஎல் போட்டியில் ரசிகர்களை அனுமதிக்காது இடம்பெற்றிருந்தது அதேபோன்று செய்யாமல் பார்வையாளர்களுக்கு முழு அனுமதி வழங்கி வழக்கம்போல கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியது.

நியூசிலாந்து கிரிக்கெட் மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதை பார்த்த ஏனைய நாட்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் மட்டுமல்லாமல் தங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டுமா தங்கள் நாட்டில் அனுமதி கிடைக்குமா என்று காத்திருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *