அவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற கோஹ்லிப் படை.. கோஹ்லியே விட்ட தவறு இறுதியில் தோல்வியில் முடிவடைந்தது.. தோல்விக்கான முக்கிய காரணங்கள் இவைதான் !

விளையாட்டு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பின்னர் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

அந்த அடிப்படையில் இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இன்;று நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்திரேலிய அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் சதம் விளாசி 114 ஓட்டங்களை குவித்தார்.

மறுமுனையில் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசி 105 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் அரைச்சதம் அடித்து 69 ஓட்டங்களையும் பெற்று அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

375 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டங்களினால் போராடி தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஹார்டிக் பாண்டியா 90 ஓட்டங்களையும், ஷிகார் தவான் 74 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் யாரும் சொல்லும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு சில காரணங்களை முக்கியமாக குறிப்பிட்டு சொல்லாம்.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும் இந்திய அணியின் களத்தடுப்பில் ஏராளமான தவறுகள் நிகழ்ந்தன. அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்றைய போட்டியில் களத்தடுப்பில் மிக மோசமாக செயற்பட்டிருந்தார்.

மறுமுனையில் இந்திய அணியின் துடுப்பாட்டம் இன்று மிக மோசமாக அமைந்திருந்தது. ஆரம்பமே இந்திய அணிக்கு மிக மோசமாக அமைந்தது. முதல் 10 ஓவர்கள் பவர்பிளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை பறிகொடுத்தது.

மற்றையது விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், ஷிரேயஷ் ஐயர் ஆகியோர் மத்திய வரிசையில் பிரகாசிக்காமை இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகும். அடுத்த போட்டியில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *