ஆஸி. அணியுடனான போட்டியில் இந்திய அணிக்கு தூணாக விளங்கிய ஹார்டிக் பாண்டியா புதிய சாதனை படைத்தார்… சாதனை பட்டியல் உள்ளே

விளையாட்டு

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பின்னர் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இன்;று நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்களினால் போராடி தோல்வி கண்டது.

இப்போட்டியில் இந்திய அணி களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகியவற்றில் விட்ட தவறின் மூலம் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் 66 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ஹார்டிக் பாண்டியாவே இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் தூணாக விளங்கினார். 76 பந்துகளை எதிர்கொண்ட ஹார்டிக் பாண்டியா 4 சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் மொத்தமாக 90 ஓட்டங்களை குவித்தார்.

இவ்வாறு 90 ஓட்டங்களை குவித்த ஹார்டிக் பாண்டியா ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தார். 39 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹார்டிக் பாண்டியா தற்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1047 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவ்வாறு 1000 ஓட்டங்களை ஹார்டிக் பாண்டியா பூர்த்தி செய்ததன் மூலம் ஒருநாள் சர்வதெச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்த இந்திய வீரராக சாதனை படைத்தார். கேதார் யாதவ்வின் சாதனையை இவ்வாறு பாண்டியா முறியடித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *