தொடரும் சோகம்.. 7 வீரர்களுக்கு கொ ரோ னா.. முக்கிய கிரிக்கெட் தொடர் சந்தேகம் !

விளையாட்டு

பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமில் மொத்தமாக 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன், தொடர்புகளை பேணிய நபர்களை அடையாளம் காணும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நியூஸிலாந்துக்கு பாகிஸ்தான் அணியினர் சென்றடைந்தனர்.

நியூஸிலாந்தில் வைத்து நடாத்தப்பட்ட முதல் சோதனைகளில் சர்பராஸ் அஹமட், றுஹைல் நாஸிர், நஸீம் ஷா, மொஹமட் அப்பாஸ், ஆபித் அலி மற்றும் டேனிஷ் அஜீஸ் ஆகிய ஆறு வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை தெரியவந்தது.

இந்நிலையில் க்ரைசேர்ச்சில் தனிமைப்படுத்தலில் உள்ள பாகிஸ்தான் அணிக்கு நடாத்தப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் சோதனை முடிவுகளின் போது மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனினும் தொற்றுக்குள்ளான நபரின் பெயர் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *