இவரு இல்லாம வின் பன்னி காட்டுங்கடா, ஒரு ஆண்டுக்கு கொண்டாடுரம்.. இந்திய அணிக்கு சவால் விடுத்த முன்னாள் தலைவர்

விளையாட்டு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த மைக்கல் கிளார்க், இந்திய கிரிக்கெட் அணிக்கு சவால் விடுத்துள்ளார். அப்படி என்ன சவால் விடுத்துள்ளார் என இந்த செய்தியில் பார்க்கலாம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடரை தொடர்ந்து இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய மூவகையான தொடர்களிலும் விளையாடவுள்ளது.

அடுத்து நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது சர்வதேச தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. இந்நிலையில் விராட் கோஹ்லி இல்லாமல் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் இந்தியாவின் வெற்றியை ஓராண்டுக்கு கொண்டாடலாம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் சவால் விடுத்துள்ளார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்தவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்புகிறார். விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு முதல் குழந்தை பிறப்பதன் காரணமாகவே விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியுடன், எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்புகிறார்.

விராட் கோஹ்லி இல்லாமல் இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் விளையாடுவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விராட் கோஹ்லி இல்லாமல் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஓராண்டுக்கு இந்தியாவின் வெற்றியை கொண்டாடலாம் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- விராட் கோஹ்லி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே எனது கருத்து. அணித்தலைவர் பொறுப்பிலும், துடுப்பாட்டத்திலிலும் அவர் இல்லாவிட்டால் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்படும்.

ஒரு வேளை விராட் கோஹ்லி இல்லாமல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி விட்டால் ஓராண்டுக்கு இந்த வெற்றியை கொண்டாடலாம். உண்மையிலேயே அது போன்ற வெற்றி நம்ப முடியாத வெற்றியாகத்தான் இருக்கும்.

இறுதி 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லி இல்லாத குறையை யார் நிரப்புவார்? என்பது இந்த டெஸ்ட் தொடரில் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *