கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கோஹ்லிப் படை.. ஜிம்பாப்வே, அயர்லாந்தை விடவும் மோசம்.. ஆஸி. முதலிடம்.. முழு புள்ளிப்பட்டியல் இதோ !!

விளையாட்டு

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஒரு சோகமான நிலைக்கு சென்றுள்ளது. அது குறித்த செய்தியை தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.

கடந்த வருட இறுதியில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது புதிதாக ஒரு தொடரை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரைப் போன்று புதிதாக ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் என்ற பெயரில் ஒரு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நடைபெறும் ஒருநாள் சர்வதேச தொடரானது ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடரின் ஒரு தொடராக காணப்படுகிறது.
இதில் விரராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால், இந்திய அணி குறித்த ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியடைந்து தொடரை இழந்தது. ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி இன்று களமிறங்குகிறது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஐ.சி.சி உலகக் உலகக்கிண்ண சுப்பர் லீக் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது.

இதேவேளை அவுஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணி 30 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 20 புள்ளிகள், ஜிம்பாப்வே 10, அயர்லாந்து 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *