வந்த வேகத்திலேயே ஹீரே.. பும்ரா, ஷமி செய்யாததை செய்து காட்டிய நம்ம நடராஜன்.. என்ன செய்தார் தெரியுமா ??

விளையாட்டு

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடரை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஹ்லிப் படையானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 சர்வதேச மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய மூவகையான தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான தொடரின் முதல் தொடரான ஒருநாள் சர்வதேச தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது. அவுஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முன்னதாகவே கைப்பற்றிய நிலையில் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியை வழங்கியது.

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றபவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய நவ்தீப் சைனி நீக்கப்பட்டு அவரின் இடத்தில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்கினார்.

குறித்த போட்டியில் பந்துவீசிய நடராஜன் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பந்து வீசினார். நடராஜனின் முதல் ஓவரில் சிக்ஸ் சென்றாலும், பதற்றம் அடையாது பந்துவீச்சை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். முக்கியமாக சரியான லென்ந்தில் பந்து வீசினார். கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சரியாக ஷோர்ட் போல் வீசாத நிலையில் நடராஜன் போட்டியில் சிறப்பாக ஷோர்ட் போல் மற்றும் யோர்க்கர்களை கலந்து பந்து வீசினார்.

இந் நிலையில் சிறப்பாக பந்து வீசி வந்த நடராஜன் மூன்றாவது போட்டியில் முதல் பவர்பிளே ஓவரிலே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் வளர்ந்துவரும் இஇளம் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.

மார்னஸ் லபுஷேன் 7 ஓட்டங்களை பெற்ற வேளையில் நடராஜன் அவரை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்தார். இது தான் நடராஜனின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணியின் முதல் பவர்பிளே ஓவரில் விக்கெட் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை நடராஜன் பெற்று உள்ளார்.

Image

இந்த தொடர் மட்டுமின்றி கடந்த 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி முதல் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவில்லை. அனுபவ வேகப்பந்துவீச்சாளர்களான ஜெஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி கூட விக்கெட் வீழ்த்தவில்லை. அந்த சாதனையை நடராஜன் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *