ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை runout ஆனா வீரர்கள் யார் யார் தெரியுமா!! 38 முறை runout என்ன கொ டு மை இது!

விளையாட்டு

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக முறை runout ஆனா அல்லது runout ஆக்கப்பட்ட வீரர்கள் வரிசையில் பல பேர் இருந்தாலும் சில குறிப்பிட்ட 6 வீரர்களை மட்டும் பார்க்கலாம். அதிகமுறை ரன் அவுட்டான வரிசையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 356 ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கு பற்றி 3617 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 6 அரைச்சதங்கள் அடங்கும். பந்துவீச்சை பொறுத்தளவில் 356 போட்டிகளில் 502 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவர் 38 முறை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இந்த வகையில் இரண்டாவது இடத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் inzamam-ul-haq இடம் பிடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 378 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி 11739 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 10 சதங்களும் 83 அரை சதங்களும் உள்ளடங்கும். பந்துவீச்சை பொருத்தளவில் 378 போட்டிகளில் பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இவர் ரன் அவுட் முறையில் 38 தடவை ஆட்டம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் 3வது இடத்தை இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் அணித்தலைவர் மாவன் அத்தபத்து இடம்பிடித்துள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 268 போட்டிகளில் பங்குபற்றி 8529 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 11 சதங்களும் 59 அரை சதங்களும் அடங்கும் இவர் ரன் அவுட் முறையில் 37 தடவை ஆட்டம் இழந்துள்ளார்.

ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த வரிசையில் நான்காவது இடத்தை இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் இடம்பிடித்துள்ளார். இவர் 334 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி 9378 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 7 சதங்களும் 58 அரை சதங்களும் அடங்கும். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் 334 போட்டிகளில் 12 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இவர் ரன் அவுட் முறையில் 32 தடவை ஆட்டம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த வரிசையில் 5 ஆவது இடத்தினை அவுஸ்திரேலிய அணியின் ME Waugh இடம்பிடித்துள்ளார். இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 244 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8500 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 18 சதங்களை 50 அரை சதங்களும் அடங்கும். பந்துவீச்சை பொருத்தளவில் 244 போட்டிகளில் 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ரன் அவுட் முறையில் 32 தடவை ஆட்டம் ஆட்டம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் வரிசையில் ஆறாவது இடத்தைப் பிடிப்பவர் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரான A Ranatunga 1982ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 269 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி 7456 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 4 சதங்கள் 49 அரை சதங்களும் உள்ளடங்கும். பந்துவீச்சை பொருத்தளவில் 269 போட்டிகளில் பங்கு பற்றி 79 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவர் ரன் அவுட் முறையில் 30 தடவை ஆட்டம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *