ஆஸி. டெஸ்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட்.. ஒரே நாள்ல ஒட்டுமொத்த விமர்சனமும் க்ளோஸ்.. தெறிக்க விடலாமா !!!!!!

விளையாட்டு

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கும் டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பயிற்சி போட்டியாக தற்போது மூன்று நாட்கள் கொண்ட பகலிரவு போட்டியானது தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த போட்டியில் இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானேயும் அவுஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் கேரியும் அணித்தலைவராக செயல்படுகின்றனர். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரின் இணைப்பாட்ட உதவியுடன் 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியில் இந்திய அணியின் பந்து வீச்சில் திணறியது. அவ்வணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் 96 ஓட்டங்கள் முன்னிலையில் தனது 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணிக்கு பிரித்திவி ஷா 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஆனால் அதனை தொடர்ந்து மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 104 ஓட்டங்களை இணைப்பாட்டாமக பெற்றனர். அரை சதம் விளாசிய சுப்மன் கில் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் மறுமுனையில் அரை சதம் விளாசிய மயங்க் அகர்வால் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவ்வாறான நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 386 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமு. இதில் இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஹனுமா விஹாரி சதம் விளாசி 104 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் 103 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.

இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது இந்த இரண்டு வீரர்களும் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் 5 ஓட்டங்களையும், ஹனுமா விஹாரி 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் முதல் இனிங்ஸில் பிரகாசிக்கத் தவறு இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் இந்த இரண்டு வீரர்களும் சதம் விளாசி தங்களது திறமையை நிரூபித்து இருக்கின்றனர். எனவே இவர்களுக்கு டெஸ்ட் அணியில் விளையாட கூடிய வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *