ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் அட்டவணையில் நிகழவுள்ள மாற்றம் என்ன தெரியுமா ? இழந்த முதலிடத்தை பிடிக்கவுள்ள கோஹ்லிப் படை !

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானதை தொடர்ந்து கிரிக்கெட்டின் ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. 50 ஓவர்கள் போட்டிக்கு ஐ.சி.சி உலகக்கிண்ணம் மற்றும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடர் என்பன நடைபெற்று வருகிறது. அதே போன்று 20 ஓவர் போட்டிக்கு இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் அதிககளவில் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.

இதனை உணர்ந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆவது டெஸ்ட் போட்டிகளை மெருகூட்டும் வகையில் புதிதாக ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் என்ற பெயரில் ஒரு புது தொடரை அறிமுகம் செய்து வைத்தது. இந்த தொடரில் ஐ.சி.சி யினால் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள 9 அணிகள் தொடரில் விளையாடி வருகிறது.

2019ஆம் ஆண்டு ஆரம்பமான குறித்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் ஒரு தொடரை முழுமையாக வெற்றி கொள்ளும் அணிக்கு 120 புள்ளிகள் வழங்கப்படும்.

அது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகளும், 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் 40 புள்ளிகளும், 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 30 புள்ளிகளும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 24 புள்ளிகள் என்ற அடிப்படையில் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்நிலையில் தற்போது குறித்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் கிட்டத்தட்ட 40 வீதமான போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அவ்வனி 296 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரண்டாமிடத்தில் இந்திய 360 புள்ளிகளுடன் காணப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம். அவுஸ்திரேலிய அணி குறைவான புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது என அனைவரும் யோசிக்கலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொ ரோ னா வை ர ஸ் தா க் க ம் காரணமாக போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், ஐ.சி.சி ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்பதற்கு பதிலாக, அதிக வெற்றி சதவீதத்தை பெற்ற அணி என முதலிடத்தை பெறும் என அறிவித்தது.

அதன் அடிப்படையிலேயே தற்போது அவுஸ்திரேலிய அணி குறைந்த புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. புதிய புள்ளி பட்டியலில் பிரகாரம் இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இந்நிலையிலேயே அடுத்து இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பான தொடராக அமைந்திருக்கும். காரணம் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்ற அணிகளும் போட்டியிடுவதன் காரணமாக இந்திய அணி தொடரை வெற்றி கொண்டால் நிச்சயமாக முதலிடத்தை முன்னேறும். எனவே முழு கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்துள்ள குறித்த டெஸ்ட் தொடரை நாமும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்நிலையில் புதிய புள்ளி பட்டியலில் பிரகாரம் இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும், இலங்கை ஆறாம் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி ஏழாம் இடத்திலும், தென்னாபிரிக்க அணி எட்டாமிடத்திலும், பங்களாதேஷ் அணி 9வது இடத்திலும் காணப்படுகிறது.

இதில் பங்களாதேஷ் அணி மாத்திரமே ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இதனால் பங்களாதேஷ் அணிக்கு ஒரு புள்ளியும் கிடைக்கவில்லை. தொடரின் முழுமையான புள்ளி பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *