இலங்கை டி20 தொடரில் விளையாடி ஜடேஜாவின் சாதனையை அசால்டா முறியடித்த இர்பான் பதான்.. வயசானாலும் சாதனை செய்ய முடியும் என்பதை நிரூபித்த பதான் !!

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்முறையாக ‘லங்கா பிரிமியர் லீக்’ என்ற பெயரில் இருபதுக்கு இருபது தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியாவிலிருந்து மூன்று வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னாள் சகலதுறை வீரரான இர்பான் பதான், அண்மையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற சுதீப் தியாகி மற்றும் வேகப்பந்து வீச்சாளரான மண்பிரீட் கோனி ஆகிய மூன்று வீரர்கள் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் இந்தியாவை சேர்ந்த வீரர்களாக காணப்படுகின்றனர்.

இதில் சுதீப் தியாகி தம்புள்ள வைக்கிங் அணியிலும், மண்பிரீட் கோனி கொழும்பு கிங்ஸ் அணியிலும், இர்பான் பதான் கண்டி டஸ்கர்ஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற திஸர பெரேரா தலைமையிலான ஜாப்னா ஸ்டாலின் மற்றும் குஷால் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் துடுப்பாட்டத்தில் 25 ஓட்டங்கள் விளாசிய இர்பான் பதான் கண்டி டஸ்கர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காளியாக திகழ்ந்தார்.

இதன் மூலம் அவர் டி20 போட்டி வரலாற்றில் 2000 ஓட்டங்களை கடந்தார். இவ்வாறான நிலையில் இந்திய அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா இருபதுக்கு இருபது போட்டி வரலாற்றில் 2000 ஓட்டங்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதன் மூலம் இந்த சாதனையை பெற்ற முதல் இந்திய வீரராகவும். ஒரே ஒரு இந்திய வீரராகவும் ரவீந்திர ஜடேஜா திகழ்ந்தார். இந்நிலையிலேயே இடது கை வேகப்பந்து வீச்சாளரும் இடது கை துடுப்பாட்ட வீரருமான இர்பான் பதான் குறித்த போட்டியில் 25 ஓட்டங்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2000 ஓட்டங்கள் பெற்றதுடன் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் ஒரே ஒரு வீரராக சாதனை படைத்திருந்த ரவிந்திர ஜடேஜாவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார். ரவிந்திர ஜடேஜா 220 போட்டிகளிலேயே இந்த சாதனையை எட்டி இருந்தார்.

ஆனால் இர்பான் பதான் 180 போட்டிகளிலேயே குறித்த சாதனையை எட்டினால். இதன் மூலம் அவரை விட குறைந்த போட்டிகளில் இந்த சாதனையை எட்டிய வீரர் என்ற அடிப்படையில் இர்பான் பதான் முதலிடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *