IPL வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் யார் தெரியுமா ? முழு பட்டியல் உள்ளே

விளையாட்டு

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. இது ஆரம்பமான போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எவ்வளவு இருந்ததோ தற்பொழுது அதை தாண்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆட்டத்தில் பரபரப்பு இறுதி கட்டத்தில் நுனி சீட்டில் உக்கார வைப்பது மற்றும் சிக்ஸர் பவுன்ரிகள் அடிப்பது தான். அந்த வகையில் ஐ.பி.ல் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பற்றி பார்க்கலாம்.

கிறிஸ் கெய்ல்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மன்னன் என்றால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தான். ஐ.பி.ல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் இவரை வாங்குவதற்கு ஐ.பி.ல் அணிகள் போட்டி போட்டு கொண்டிருந்தன. இந்நிலையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை அடுத்தவர்கள் வரிசையில் முறையே 1,3,5 ஆகிய இடங்களை பிடித்துள்ளார்.

புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 17 சிக்ஸர்களையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 13 சிக்ஸர்களையும், கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 12 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

ப்ரெண்டன் மெக்கலம்
இருபதுக்கு இருபது போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அ தி ர டி துடுப்பாட்ட வீரராக வலம் வந்தவர் என்று கூறலாம். அ தி ர டி ஆட்டத்திற்கு பேர்போன மெக்கலம் ஐ.பி.ல் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடி ஒரு போட்டியில் 13 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

டி வில்லியர்ஸ்
தென்னாபிரிக்க அணியின் அ தி ர டி ஆட்டகாரரும் மிஸ்டர் 360 டிகிரி என்றழைக்கப்படும் டி வில்லியர்ஸ் ஐ.பி.ல் தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

சனத் ஜெயசூர்யா
இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சனத் ஜெயசூர்யா மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி வந்த நிலையில் 2008ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *