இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் யார் தெரியுமா ? இத்தனை வீரர்கள் தானா !!!!

விளையாட்டு

ஒவ்வொரு வருடமும் ஏராளமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்கள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ஆனால் இந்த வருடம் உலகில் ஏற்பட்ட கொ டி ய கொ ரோ னா வைரஸ் தொ ற் று நோ ய் தாக்கத்தின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் நடைபெறவில்லை. குறைந்தளவான கிரிக்கெட் போட்டிகளே நடைபெற்றிருக்கிறது. அந்தவகையில் இந்த வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளே அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. காரணம் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடைபெற்றிருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் தொடர்பில் தான் நாம் தற்போது அவதானம் செலுத்துகிறோம். அந்த வகையில் குறித்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அணியின் இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷான் மசூத். இவர் குறைந்த அளவிலான போட்டிகளில் விளையாடி அதாவது வெறும் 6 இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடி இரண்டு சதங்களை விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.

இவரை தொடர்ந்து இன்னும் இரண்டு வீரர்கள் 2 சதங்களை அடித்த வீரர்களாக காணப்படுகின்றனர். இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் 12 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அவரை தொடர்ந்து மற்றுமொரு இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான டொம் சிப்லேய் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டு சதங்களை பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்ததாக நான்காமிடத்தில் பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளரும் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான முஷ்பிகூர் ரஹீம், ஒரு இன்னிங்ஸில் விளையாடி அந்த இன்னிங்சில் அவர் இரட்டை சதம் அடித்திருந்தார். அவர் என்னை தொடர்ந்து அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர், இலங்கை அணியை சேர்ந்த அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் குஷால் மென்டிஸ் ஆகியோர் 5,6,7ஆம் இடங்களில் உள்ளனர்.

தொடர்ந்து பங்களாதேஷ் அணி வீரர் மோமினுள் ஹாக், அவுஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஸேன், சிம்பாப்வே அணி வீரர் ஷோன் வில்லியம்ஸ், நியூசிலாந்து வீரர்களான கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிக்கொலஸ், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான அசார் அலி, பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் ஆகியோர் வரிசையில் காணப்படுகின்றனர்.

அவர்களை தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் தற்போதைய அணித்தலைவர் கிரேக் ஏர்வின், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜெர்மைன் பிளக்வூட், இங்கிலாந்து அணி வீரர்களான ஷக் க்ரௌலி, ஜொஸ் பட்லர் மற்றும் ஒல்லி போப் ஆகிய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இந்த வருடம் சதமடித்த வீரர்களாக காணப்படுகின்றனர்.

அந்த அடிப்படையில் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 19 வீரர்கள் சதமடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு இந்திய வீரரும் இந்த வருடம் சதம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *