எம்.எஸ் டோனிக்கு தரமான பாடம் கற்பித்த ஜோஸ் ஹேசில்வுட்

விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முக்கியமாக குறிப்பிட கூடிய ஒரு விடயம் இருக்கிறது. அதாவது 53 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சில் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியின் வெறும் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

குறிப்பாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இவ்வாறு 36 ஓட்டங்களுக்கு சுருண்டு போவதற்கு அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜோஸ் ஹேசில்வுட் முக்கிய ஒரு புள்ளியை அமைந்திருந்தார்.

அவருடைய பந்துவீச்சு எதிர்பாராத அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அவர் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்த நிலையிலேயே இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை தெறிக்கவிட்டார். குறித்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் யோர்க்கர் பந்துகளையும், பவுண்ஸர் பந்துகளையும் சரியான நேரத்தில் சரியான பந்துகளை வீசி அனைவரையும் கவனத்திற்கு இழுத்தார்.

இது ஒரு பக்கமிருக்க நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13ஆவது தொடரான 2020ஆம் ஆண்டுக்கான தொடரானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிறைவு பெற்றிருந்தது. இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட், எம்.எஸ் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுருந்தார்.

ஆனால் அவருக்கு இந்த வருடம் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஒரு போட்டியிலேயே விளையாடுவதற்கு மாத்திரமே வாய்ப்பு கிடைத்தது. இவருடைய பந்துவீச்சு திறமையை எம.;எஸ் டோனி இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பயன்படுத்த தவறு இருக்கிறார் என்றே குறிப்பிடவேண்டும். இவ்வாறானதொரு நிலையிலேயே எம்.எஸ் டோனிக்கு ஜோஸ் ஹேசில்வுட் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *