விராட் கோஹ்லியின் ஜேர்சி இலக்கத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகமா…! நீங்க கண்டிப்பா சாக் ஆகிடுவிங்க. சதம் அடித்ததும் கையை பின்னல் காட்டுவதும் இதற்குத்தான்

விளையாட்டு

தற்போதைய உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு அடுத்த இடத்தை கிரிக்கெட் பிடிக்கிறது. அந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது கிரிக்கெட். ஆரம்ப காலங்களில் ஒருசில நாடுகள் மட்டுமே விளையாடி வந்த இந்த போட்டியை தற்போது பல நாடுகளும் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக எந்த வீரரும் தங்களது ஜெர்சிக்கு பின் தங்களது எண்களை அச்சிடக்கூடாது என இருந்தது. ஆனால் தற்போது அதுவும் நீங்கி விட்டது. டெஸ்ட் தொடரிலும் வீரர்கள் தங்களது எண்களை தங்களது ஆடைகளில் அச்சிட்டுள்ளனர்.

இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அவர்களின் பெயரை விட அவர்களின் எண்களை சொன்னாலே நமக்கு நன்றாக தெரியும். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக்கான எங்களை தேர்வு செய்து அதனை தங்களது ஆடையில் அச்சிட்டுள்ளனர். விராட் கோஹ்லி ஜெர்சி எண் 18.

இந்த எண்களுக்கு பின்னால் இத்தனை சோகமா? அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய அணியின் தற்போதைய அணி தலைவராக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. இவர் தனக்கான எண்ணாக தேர்வு செய்திருப்பது 18. இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணத்தை விராட் கோஹ்லி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதில், நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான். அவர் இறந்த தேதி 18 டிசம்பர் 2006. அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பாவே என்னுடன் இருப்பதாக தோன்றும் எனவும் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *