‘கை து செய்யப்பட்ட பிறகு தான் எனக்கு இது தெரியும்’ – சின்னப் புள்ளத்தனமா பேசியுள்ளாராம் ரெய்னா

விளையாட்டு

சுரேஷ் ரெய்னா என்றால் யார் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வினை அறிவித்தார். மஹேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்து ஒரு சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் ஓய்வினை அறிவித்திருந்தமை அனைவரையும் கவனத்தில் கொண்டது.

இது ஒரு பக்கமிருக்க நிலையில் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளையாடி வருகிறார். 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது பெரும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்கள் கருதி ஒரு போட்டியிலும் விளையாடாத நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார். அவர் நாடு திரும்பியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்திருந்தது.

இதன் காரணமாக சுரேஷ் ரெய்னா சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும், சுரேஷ் ரெய்னா தலைமையில் ஒரு புதிய அணி 2021 தொடரில் விளையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை இது நடந்தாலும் நடக்கலாம்.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின்hல் நடாத்தப்பட்டு வரும் தொடர்களில் ஒன்றான சையது முஷ்டாக் அலி இருபதுக்கு இருபது தொடரானது எதிர்வரும் ஜனவரி ஆரம்பமாகிறது. இதில் சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச அணியின் தலைவராக செயல்பட உள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சுரேஷ் ரெய்னா கொ ரோ ன வை ர ஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மும்பையில் அமைந்துள்ள இரவுநேர விடுதியொன்றில் கொ ரோ னா வை ர ஸ் விதிமுறைகளை மீறி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டிருந்த குற்றத்தின் அடிப்படையில் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் கைது நள்ளிரவில் செய்யப்பட்டனர்.

பின்னர் காhலை 6:00 மணி அளவில் அவர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறான நிலையில் தன்னுடைய கைது குறித்து சுரேஷ் ரெய்னா இவ்வாறு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘நாங்கள் மும்பையில் ஒரு படப்பிடிப்பிற்காகவே சென்றிருந்தோம். அந்த படப்பிடிப்பு நிறைவடைய நீண்ட நேரம் ஆகிவிட்டது. டெல்லி புறப்படுவதற்கு முன்னர் எனது சில நண்பர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்திருந்தேன்.’

‘இதற்காக விடுதிக்குச் சென்றிருந்தேன். மும்பையில் உள்ள நேர கட்டுப்பாடு மற்றும் கொ ரோ னா வை ர ஸ் க ட் டு ப் பா டு விதிமுறைகள் எனக்கு உண்மையாகவே தெரியாது. இந்த விதிமுறைகள் பற்றி கூறியவுடன் உடனடியாக ஏற்றுக்கொண்டு து ர தி ஸ் ட வசமாக நடந்த சம்பவத்திற்கு அதிகாரியிடம் வருத்தம் தெரிவித்தேன்.’ என தெரித்ததார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *