5 அ தி ர டி மாற்றங்களுடன் விளையாடும் இந்திய 11 பேர் அணி இதுதான் – பக்கா பிளான் போட்ட கம்பீர்

விளையாட்டு

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்சமயம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. குறித்து இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது நடைபெற்று வருகிறது. குறித்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நிறைவு பெற்றுள்ள நிலையில் அந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இது ஒருபுறம் இருந்தாலும் குறித்த போட்டியில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தமை இன்று அனைவராலும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

அதுவும் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி இவ்வாறு படு மோசமான ஒரு ஓட்ட எண்ணிக்கை பதிவு செய்தமை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளி ஆகவே தெரிகிறது. இவ்வாறான நிலையில் இந்திய அணி தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோஹ்லி தனது மனைவிக்கு முதல் குழந்தை கிடைக்க உள்ளதன் காரணத்தின் அடிப்படையில் முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புகிறார்.

எதிர்வருகின்ற மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் அஜிங்கிய ரஹானே இந்திய அணியின் தலைவராக செயற்படவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கவுதம் கம்பீர் கிரிக்கெட் வீரர்களுக்கு பல ஆலோசனைகளை கூறி வருவார். இவ்வாறான நிலையில் அவர் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பதினொருவர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

கவுதம் கம்பீர் தெரிவு செய்துள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விராட் கோஹ்லிக்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கே.எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். சகலதுறை வீரராக ரவீந்திர ஜடேஜாவும், ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் காப்பாளராக விருத்திமான் சஹாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். இதேவேளை பயிற்சி போட்டிகளில் சொதப்பி முதலாவது டெஸ்ட் போட்டிகளும் கிடைத்த வாய்ப்பில் சொதப்பியிருந்த இளம் துடுப்பாட்ட வீரரான பிரித்திவி ஷா அடுத்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.

கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ள பதினொருவர் அணி.
சுப்மன் கில், மயங்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (தலைவர்), கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ராஹ், நவ்தீப் சைனி ஃ மொஹமட் சிராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *