சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஒருநாள், டி20 அணியில் ஓரங்கட்டப்பட இதுதான் காரணம் – உண்மையை மறைவில்லாமல் கூறிய கவாஸ்கர்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியானது இன்று கிரிக்கெட் உலகில் ஒரு பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டு வருகிறது. பலமான வீரர்கள் உள்ள ஒரு அணியாக இந்திய அணி காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஒருவராக காணப்படுபவர் தான் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் அறிமுகமான காலம் முதல் இன்று வரை இந்திய அணிக்காக மிக சிறப்பாகவே பந்து வீசி வருகிறார். இருந்தாலும் இவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார்.


பலரும் அஸ்வின் ஓரங்கட்டுபடுவதற்கு பலவிதமான காரணங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு இதுதான் காரணம் என நச்சன்று நாலு வார்த்தையில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், மனதில் பட்டதை அஸ்வின் பளிச்சென்று பேசுவதால் தான் அவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் தொடர்ந்து சேர்க்கப்படாமல் உள்ளார். அஸ்வின் ஒரு போட்டியில் விக்கெட் வீழ்த்த வில்லை என்றால் கூட அடுத்த போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட மாட்டார். ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு இவ்வாறு நடப்பதில்லை.

பலமுறைகள் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அணி வீரர்களுக்கு இடையில் நடைபெறும் கூட்டத்தில் அஸ்வின் எதையும் மறைக்காமல் துணிச்சலாக மனதில் பட்டதை அப்படியே சொல்வார். ஏனைய வீரர்கள் ஒரு விடயத்தை பிடிக்கவில்லை என்றால் தலையசைத்துவிட்டு அப்படியே வந்து விடுவார்கள்.

ஆனால் அஸ்வின் அப்படிப்பட்டவர் அல்ல. தவறு என்று தெரிந்தால் உடனடியாக அதை நேருக்கு நேர் கூறுவார். இதனாலேயே அஸ்வின் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரவிசந்திரன் அஸ்வின் இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடி இருந்தார். அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அந்த தொடரிலேயே இறுதியாக விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *