ஒரு நாளும் இல்லாமல் திடீரென அம்பயரிடம் சண்டைக்கு சென்ற அஜிங்கிய ரஹானே.. நடந்தது என்ன ? முழு விபரம் உள்ளே

விளையாட்டு

அஜிங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணிக்கும் டிம் பெயின் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் பாக்சிங் டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மார்னஸ் லபுஷேன் மாத்திரம் நிலைத்து நின்று அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக 48 ஓட்டங்களை குவித்தார்.

மேலும் டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களை குவித்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய மொஹமட் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் பதம் பார்த்தனர்.

இந்த போட்டியின் போது நடுவர்கள் வழங்கிய சில முடிவுகளின் காரணமாக வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போட்டியின் 55ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்னுக்கு ரன்-அவுட் ஆட்டமிழப்பு நிகழ்த்தப்பட்டது. குறித்த ஆட்டமிழப்பு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

3ஆவது நடுவர் ஆட்டமிழப்பு இல்லை என அறிவித்தார். ஆனால் அதனை தொலைக்காட்சியில் பார்க்கின்ற போது அது அவுட் என தெளிவாக விளங்குகிறது. இதனால் 3வது நடுவர் அவுட் இல்லை என தீர்ப்பளித்ததை தொடர்ந்து அணித்தலைவர் ரஹானே கோபமடைந்து நடுவரிடம் நேரடியாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து நடுவரை பார்த்து கோபமான சில வார்த்தைகளை பயன்படுத்தினர். குறித்த சம்பவமானது போட்டியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *