டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரிதாபமாக அதிக தடவைகள் சதத்தினை தவறவிட்ட வீரர்கள் பட்டியல் !

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் உலகில் மூன்று விதமான போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உலகில் ஏராளமான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற போட்டிகளே அதிக அளவில் பிரபலம் அடைகிறது. கிரிக்கெட் உலகில் நாளுக்கு நாள் சாதனைகள் படைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இவ்வாறான நிலையில் நாம் இந்த இடத்தில் பார்க்கப்போவது என்னவென்று சொன்னால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தடவைகள் 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று மிகக் குறைந்த ஓட்டங்களினால் பரிதாபமாக சதத்தை தவறவிட்ட வீரர்கள் தொடர்பில் தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் காணப்படுபவர் தான் அவுஸ்திரேலிய அணியினுடைய முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் வாக். 1985ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்ரேலிய அணியில் மிக தலை சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கினார் ஸ்டீவ் வாக்.

168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தன்னுடைய சதத்தினை மிக இலகுவில் தவறவிட்டு இருந்தார். அதாவது அவர் 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று 10 போட்டிகளில் ஆட்டமிழந்தார். அவர் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆயிரத்து 917 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்படுபவர் தான் இந்திய அணி உடைய முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ராகுல் டிராவிட். 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட் மொத்தமாக 13 ஆயிரத்து 288 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதில் அவர் 90க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று 10 போட்டிகளில் ஆட்டமிழந்து குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார். மூன்றாவது இடத்தில் காணப்படுபவர் தான் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 16 ஆயிரத்து 921 டெஸ்ட் ஓட்டங்களை குவித்து இன்றுவரையில் அதிக டெஸ்ட் ஓட்டங்களை குவித்த வீரராக காணப்படுகின்றார்.

அவர் 10 போட்டிகளில் 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் காணப்படுபவர் அவுஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான மிட்செல் ஸ்லேட்டர். இவர் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 74 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 9 போட்டிகளில் இவ்வாறு 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று பரிதாபமாக ஆட்டமிழந்துள்ளார்.

ஐந்தாவது இடத்தில் காணப்படுபவர் தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் உடைய முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அல்வின் கைல்லிசரண். இவர் 1972ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெறும் 66 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று பரிதாபகரமாக சாதனையை தவறவிட்ட இருந்தார்.

அடுத்ததாக ஆறாவது இடத்தில் காணப்படுபவர் தான் நாம் அனைவரும் அறிந்த 360 டிகிரி என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 8 போட்டிகளில் 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று ஆட்டமிழந்தார்.

குறித்த பட்டியலில் இலங்கை வீரர்கள் வரிiசையில் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 149 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று ஆட்டமிழந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *