டெஸ்டில் குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்த வீரர் யார் தெரியுமா ? டாப் 5 வீரர்கள் பட்டியல் உள்ளே !

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக வீரர்கள் நிதானமாகவே துடுப்பெடுத்தாடுவார்கள். காரணம் டெஸ்ட் போட்டி என்பது விக்கெட்டுகளை மையப்படுத்தி நடைபெறுகின்ற போட்டி என்கின்ற காரணத்தினால் வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்காமல் தவிர்ந்து கொள்வதற்காகவே நிதானமாக விளையாடுவார்கள். இருந்தும் ஒரு சில தருணங்களில் வேகமாக துடுப்பெடுத்தாட வேண்டிய நிலைமையும் ஏற்படும். அந்தவகையில் நாம் இந்த இடத்தில் பார்க்கப்போவது என்னவென்று சொன்னால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பெறப்பட்ட அரைசதங்கள் தொடர்பில் தான் அவதானம் செலுத்துவோம்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியினுடைய முன்னாள் அணித் தலைவரான மிஸ்பா உல் ஹக் 21 பந்துகளில் அரைச்சதம் விளாசி இருந்தார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அபுதாபியில் வைத்து அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 21 பந்தில் அரைசதம் விளாசினார். இன்று வரையில் அதுவே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பெறப்பட்ட அரைச்சதம் ஆக கருதப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக காணப்படுவது அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர். கடந்த 2011ஆம் ஆண்டு சிட்னியில் வைத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதற்கு அடுத்ததாக தென்னாபிரிக்கா அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜக் காலிஸ் கடந்த 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சார்பாக அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கபில் தேவ் காணப்படுகிறார்.

இவர் கடந்த 1982ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதேபோன்று இலங்கை வீரர்கள் வரிசையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திலகரட்ண டில்ஷான் கடந்த 2009ஆம் ஆண்டு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *