சிஎஸ்கே ரசிகர்கள் இதயத்தில்.. ஈட்டியை இறக்கிய “அந்த” போட்டோ! அப்போ தோனி? இதான் பின்னணியாமே

சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சியில் இருந்து வெளியாகி இருக்கும் முக்கியமான போட்டோ ஒன்று சிஎஸ்கே ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த போட்டோ தொடர்பாக சில முக்கிய தகவல்களை சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

ஐபிஎல் 2023 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அடுத்து புனேவிற்கு எதிராக நடந்த போட்டியில் வென்றது.

இதையடுத்து மும்பைக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது.

இதப்பாருங்க> தோனியின் ‘அந்த’ தவறு CSK-க்கு அதிக விலை கொடுத்திருக்கும், ஆனால்…

முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.

இப்படி வரிசையாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த சிஎஸ்கே நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்து நடத்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றது. சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்தது

இதப்பாருங்க> தோனி அணிக்கு எதிரான அதிரடி அதிரடி! விராட் கோஹ்லிக்கு அபராதம்

தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 45 பந்தில் கான்வே 83 ரன்கள் ஒரு பக்கம் எடுத்தார்.

அதன்பின் இறங்கிய ஆர்சிபி அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க, கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

போட்டோ டிரெண்டிங்: இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சியில் இருந்து வெளியாகி இருக்கும் முக்கியமான போட்டோ ஒன்று சிஎஸ்கே ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் சிஎஸ்கே தொடக்க வீரர் தேவன் கான்வே கீப்பிங் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு பின் தோனி பயிற்சி மேற்கொண்டாலும் அவர் சில நிமிடங்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்டார்.

இதப்பாருங்க> எம்எஸ் தோனி டச்! முந்தைய உரிமையாளர்கள் அவர்களை நிராகரித்த பிறகு CSK இல் செழித்தோங்கிய IPL ஆட்கள்

இதனால் தோனி எங்கே இந்த தொடரில் இனி ஆட மாட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவர் ஓய்வு பெறுகிறாரா என்றும் இணையத்தில் விவாதம் செய்தனர்.

அந்த போட்டோ தொடர்பாக சில முக்கிய தகவல்களை சிஎஸ்கே அணி நிர்வாகத்தை சேர்ந்த சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

அதன்படி தோனி ஓய்வு பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சீசன் முடிவை பொருத்தே அது தீர்மானிக்கப்படும். இந்த சீசனில் சிஎஸ்கே வென்றால் தோனி ஓய்வு பெற வாய்ப்புகள் உள்ளன.

மற்றபடி அதில் இப்போதைக்கு இருந்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தேவன் கான்வே கீப்பிங் பயிற்சி இதற்கு முன்பே செய்தார்.

இதப்பாருங்க> ‘புதிய கேப்டனின் கீழ் விளையாடுவேன்’ அச்சுறுத்தலுக்குப் பிறகு CSK பந்துவீச்சாளர் மீது MS தோனியின் அப்பட்டமான தீர்ப்பு | மட்டைப்பந்து

இந்த சீசன் தொடக்கத்தில் தோனி காலில் காயம் பட்டது. ஆனாலும் அவர் ஓய்வு இன்றி ஆடி வருகிறார். மிடில் ஓவர்களில் அவர் இனி கொஞ்சம் ஓய்வு எடுக்க வாய்ப்பு உள்ளது.

அதன் காரணமாகவே கான்வே கீப்பிங் செய்ய பயிற்சி எடுத்தார். அந்த நேரத்தில் வேறு ஒருவர் கேப்டன்சி பணிகளை செய்வதற்கு பதிலாக தோனி பெவிலியனில் இருந்து ஆலோசனைகளை வழங்குவார். தோனியின் ஓய்வை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அணி நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கான்வே பயிற்சி எடுத்து.. வெறுமனே போட்டிக்கு இடையே சில ஓவர்கள் தோனி ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *