நல்ல ஃபார்மில் இருந்தும் அணியில் இனி ராகுலுக்கு வாய்ப்பே இல்லை.. காரணம் வெளியானது !!!!

விளையாட்டு

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்சமயம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவிய காரணத்தினால் மிகவும் அதிரடியான மாற்றங்கள் இந்த இரண்டாவது போட்டிகளில் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களான சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சிராஜ் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டனர்.

India vs Australia: Fans Want KL Rahul in Test Team After Dismal Batting Show in Adelaide

இது ஒரு நல்லதொரு விடயமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் இந்த போட்டியில் தவறவிடப்பட்டுள்ளார். கே.எல் ராகுல் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று போட்டி ஆரம்பிக்க முன்னரே பல விமர்சகர்களும் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையிலேயே கே.எல் ராகுல் தவறவிடப்பட்டார்.

இந்திய அணியில் இளம் வீரரான சுப்மன் கில் இடம்பெற்ற காரணத்தினாலேயே கே.எல் ராகுல் இவ்வாறு புறம் தள்ளப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய மண்ணில் கே.எல் ராகுல் சொதப்பியதன் காரணமாகவே இந்த போட்டியில் தேர்வு செய்யப்படாமல் இருக்கலாம் என கருத்து கூறப்படுகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் அது கடந்த வருடம் ஆகும் இது இந்த வருடம் ஆகும். அண்மையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கூட அதிகூடிய ஓட்டங்களை குவித்த வீரராக கே.எல் ராகுல் காணப்படுகின்ற நிலையில், அவர் தற்போது ஒரு நல்ல ஃபார்மில் இருக்கிறார். இவ்வாறு அவரை புறந்தள்ளியது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் கே.எல் ராகுல் இனி வருகின்ற போட்டிகளில் விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதாவது இந்திய அணியின் மற்றுமொரு நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மா மூன்றாவது நான்காவது டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார். எனவே கே.எல் ராகுல் நிச்சயமாக விளையாட மாட்டார் என்பது உறுதியான ஒரு கதையாக இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *