ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப முன்னர் இந்திய வீரருக்கு காத்திருந்த இன்ப அ தி ர் ச் சி !!

விளையாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணித்தலைவர் விராட் கோலி தனது முதல் குழந்தை பிறப்புக்காக இந்தியா திரும்பியிருக்கும் நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லி இல்லாத நிலையில் அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டத்தை தள்ளி குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக அமைந்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தி உள்ளது.

2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பந்துவீசும் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரால் தொடர்ந்து பந்துவீச முடியாமல் போக ஓவரில் 3 பந்துகள் மாத்திரம் வீசிய நிலையில் இடைநடுவில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை.

அவருக்கு ஏற்பட்ட உபாதை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவருக்கு இரண்டு வாரங்கள் குறைந்தது ஓய்வு தேவை என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் எஞ்சிய போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா டெஸ்ட் குழாமில் இருந்து நீக்கப்பட்ட உமேஷ் யாதவ் சிகிச்சைகளுக்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லவுள்ளார். இதற்காக அவர் இந்தியா திரும்புவதற்கான இறுதித் தருவாயில் இருக்கிறார். இவ்வாறானதொரு நிலையில் உமேஷ் யாதவுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு செய்தி கிடைத்துள்ளது.

அந்த செய்தி என்னவென்று சொன்னால் உமேஷ் யாதவுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *