அணியில் இணைக்க செய்த காரியம்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட வருண் சக்கரவர்த்தி !

விளையாட்டு

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு அணியும் டாக்டர்கள், பிசியோ ஸ்டாஃப்கள் வைத்திருப்பார்கள்.
இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அந்தந்த அணிகள் உடனடியாக பி.சி.சி.ஐ. க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கும் போது சில நேரங்களில் பி.சி.சி.ஐ மேற்கொண்டு விளையாட அனுமதிக்காது. இதனால் வீரர்களின் காயத்தை ஐ.பி.எல் அணிகள் சில நேரங்களில் மறைத்து விடுகின்றன.

இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இதற்கான அணியை பி.சி.சி.ஐ தேர்வுக்குழு தேர்வு செய்தது. காயத்தால் ரோஹிட் சர்மாவை அவுஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யவில்லை. தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவரை தேர்வு செய்யவில்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சகா கடைசி லீக் போட்டியின் போது காயம் அடைந்தார். நேற்றைய போட்டியின் போது தான் வார்னர் அவருக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி எனத் தெரிவித்தார். இதனால் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய டி20 அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வருண் சக்ரவர்த்தி, காயத்தோடுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் அதனை மறைத்து இந்திய அணியில் இணைக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த உபாதை வெளிச்சத்துக்குவர அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மற்றுமொரு தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இiணைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *