இந்திய அணியின் உப தலைவரும் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ரோஹிட் சர்மா தற்சமயம் அவுஸ்ரேலிய அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு முழுமையாக தயாராகி விட்டார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது ரோஹிட் சர்மா உ பாதைக்கு உள்ளானார். அதனை தொடர்ந்து அவர் அடுத்த சில போட்டிகளில் விளையாட நிலையில் மீண்டும் ப்ளேஓப் சுற்று போட்டிகளில் களமிறங்கி தனது ஆட்டத்தை நிரூபித்தார்.
இருந்தாலும் அவர் அவுஸ்திரேலிய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணியில் இடம் பிடிக்கவில்லை. மாறாக பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் டெஸ்ட் குழாமில் மாத்திரமே இடம்பெற்றிருந்தார். அதிலும் அவுஸ்திரேலியாவுக்கு பின்னராகவே வந்த ரோஹிட் சர்மா தனிமைப்படுத்தல் சட்டங்கள் ஆகியவற்றை நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டு இருந்து தற்போது அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் தயாராகி உள்ளார் ரோஹிட் சர்மா. இவ்வாறானதொரு நிலையில் இந்திய அணியின் வழமையான தலைவரான விராட் கோஹ்லியும் தனது முதல் குழந்தை கிடைக்கும் அதன் அ டிப்படையில் அவர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்பி இருக்கிறார்.
இந்திய அணியின் தலைவராக டெஸ்ட் அணியின் உப தலைவரான அஜிங்கிய ரஹானே அதேசமயம் செயற்பட்டு வருகிறார். இவ்வாறானதொரு நிலையில் இந்திய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் உப தலைவரான ரோஹிட் சர்மா தற்சமயம் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் அணியில் உப தலைவராக ரோஹிட் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த தகவல் செய்திகள் வெளியாகி இருந்தாலும் கூட தற்போது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அடுத்த போட்டியில் ரோஹிட் சர்மா நிச்சயம் விளையாடுவார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.