42 வருட தீராத பசி.. டோனியின் சாதனையை சமன் செய்வாரா ரஹானே ?

விளையாட்டு

அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற பொக்சிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு இருந்ததன் காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தொடர் 1-1 என்ற அடிப்படையில் தற்சமயம் சமநிலை பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் நாளை ஆரம்பமாகும் சிட்னி டெஸ்டில் அணித்தலைவர் அஜிங்கிய ரஹானே, முன்னாள் அணித்தலைவர் எம.;எஸ் டோனியின் சாதனையை சமன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. அதாவது அஜிங்கிய ரஹானே இந்திய அணிக்கு 3 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு அந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், கடந்த 2018ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் மற்றும் அண்மையில் 2020ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று இவ்வாறு போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் அணியின் தலைவராக கடமையாற்றிய அணித்தலைவர்களில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வென்ற சாதனையை மகேந்திரசிங் டோனி மாத்திரமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு மகேந்திரசிங் டோனி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று பெற்றிருந்தார். ஆனால் விராட் கோஹ்லி தொடர்ந்து 4 வெற்றிகளை தனது அணிக்காக பெற்றுக் கொடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நாளை சிட்னியில் நடைபெறுகின்ற அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஜிங்கிய ரஹானே தலைமையில் களமிறங்கும் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அஜிங்கிய ரஹானே, டோனியின் சாதனையை சமன் செய்வார். அதுமாத்திரமல்லாமல் அஜிங்கியா ரஹானே தனி வீரனாக ஒரு சாதனை செய்யக்கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.

அஜிங்கிய ரஹானே தற்போது அவுஸ்திரேலிய மண்ணில் 797 ஓட்டங்களை குவித்துள்ளார். இவ்வாறான நிலையில் இன்னும் 203 ஓட்டங்களை தேவைப்படுகிறது ஆயிரம் ஓட்டங்களை கடப்பதற்கு. அவ்வாறு அஜிங்கிய ரஹானே இந்த தொடரில் 203 ஓட்டங்களை குவித்தால் அவுஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் டெஸ்ட் போட்டிகளை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

மூன்றாவது போட்டியானது சிட்னியில் நடைபெற உள்ள நிலையில் சிட்னி மைதானத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இதுவரையில் 12 டெஸ்ட் போட்டிகளில் சிட்னி மைதானத்தில் விளையாடியுள்ள இந்திய அணி 6 போட்டிகளில் தோல்வியையும் ஒரு போட்டியில் வெற்றியை அடைந்துள்ளது. ஆனால் கடந்த 42 வருடங்களாக வெற்றிபெற முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *