6 மாதம் ஓய்வு தேவை என்ற முக்கிய இந்திய வீரர் ரெய்னாவின் அணியில் விளையாடுகிறார்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விளையாட்டு

2020ஆம் ஆண்டுக்கான 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரானது பெரும் ச வா லுக்கு மத்தியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரில் பல வீரர்கள் உபாதைக்கு உள்ளானார்கள். சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய முக்கியமாக பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் தசைப் பிடிப்புக்கு உள்ளான நிலையில் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அடுத்த போட்டிகளில் அவர் இல்லாதது சன்ரைசர்ஸ் அணிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியது.

உபாதை காரணமாக இந்திய அணியின் அவுஸ்ரேலிய சுற்றுப்பயணத்தில் புவனேஸ்வர் குமார் இடம் பெறவில்லை. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் புவனேஸ்வர் குமாருக்கு அவருக்கு தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் அடுத்து நடைபெறவுள்ள 2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரை அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகி வந்தது.

இவ்வாறான நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு இல்லாத ஒரு இருபதுக்கு இருபது லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெறவுள்ள சையித் முஷ்டாக் அலி கிண்ணத் தொடரில் உத்தரபிரதேச அணியில் இவ்வாறு ஆறு மாதங்கள் ஓய்வு தேவை என்ற புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது.

நடைபெற்று முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய பிரியம் கர்க் தலைமையிலான உத்தரபிரதேச அணியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா விளையாடுவதுடன் தற்போது புவனேஷ்வர் குமாரும் அதே அணியில் விளையாடுகின்றனமை குறிப்பிடதக்கது.

புவனேஸ்வர் குமார் இவ்வாறு சையித் முஷ்டாக் அலி கிண்ண தொடரில் விளையாடும் அடிப்படையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் அவர் விளையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *