மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விடுக்கப்பட்ட பாரிய எச்சரிக்கை.. தி கை த் து ப் போ ன இரசிகர்கள் !

விளையாட்டு

2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் ஆரம்பத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் டெல்லி கெப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரிக்கி பாண்டிங் எ ச் ச ரி க் கை விடுத்துள்ளார். 13ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி இன்று டுபாயில் நடைபெறுகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டெல்லி கெப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எ ச் ச ரி க் கை விடுத்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பொண்டிங் கூறுகையில் ”பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், இது சிறந்த சீசன். இருந்தாலும் நாங்கள் இதுவரை சம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. நாங்கள் இங்கே வந்தது, கோப்பையை வெல்வதற்குதான். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இந்த தொடரில் சிறந்த அணியாக திகழ்ந்த வேளையில் தொடர்ந்து நான்கு தோல்வி விரக்தியை ஏற்படுத்தியது. வீரர்கள் முக்கியமான போட்டியில் ஆர்.சி.பி.க்கு எதிராகவும், சன்ரைஸஸ் ஐதராபாத்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஐ.பி.எல் இறுதிப் போட்டியை எளிதாக நினைக்க வேண்டாம்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *