பெண் குழந்தை பிறப்பால் மேலும் அதிகரிக்கும் கோலியின் வருமானம் ! காரணம் என்ன தெரியுமா ?

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டு வருபவர் தான் விராட் கோலி. விராட் கோலியை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நம் அனைவருக்கும் அவருடைய திறமையும் துடுப்பாட்டமும் தெரிந்திருக்கும். இவ்வாறானதொரு நிலையில் விராட் கோலியினுடைய வருமானம் தொடர்பில் தான் நாம் தற்போது கவனம் செலுத்துகிறோம். விராட் கோலி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் இத்தாலியில் வைத்து தான் காதலித்து வந்த பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை திருமணம் முடித்தார்.

விளையாட்டு உலகில் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விராட் கோலி கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு அப்பால் விளம்பரங்கள் மூலம் அதிகமான சம்பளம் பெறுகிறார். கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக அளவில் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பெறும் வீரராக விராட் கோலி காணப்படுகிறார்.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு இரு நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த செய்தியை அவர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் மூலமாக வெளியிட்டு இருந்தார்.

விராட் கோலி விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வகையிலும் கூட சமூக வலைத்தளங்களிலும் அதிகளவில் வருமானத்தை ஈட்டுபவராக காணப்படுகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் அதிகளவில் வருமானத்தை தேடிக் கொள்கிறார். பெண் குழந்தை பிறந்ததையொட்டி மேலும் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன.

குழந்தைகளுக்குரிய பேம்பர்ஸ், ஷூ மற்றும் குளிர்பான நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன. ஆனால் கோலி இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. விரைவில் அவர் அதில் கையெழுத்து இடுவார். இதன் மூலம் அவரது விளம்பரங்கள் மேலும் அதிகரிக்கும். வீராட் கோலி ஏற்கனவே பல்வேறு விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *