வெள்ளை ஜேர்சியில் அமர்க்களமாக மின்னும் இரு தமிழக வீரர்கள் !! இருவருக்கும் வாய்ப்பு கிடைக்க இது தான் காரணம் – வீடியோ இணைப்பு

விளையாட்டு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரினை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வரும் நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளது. முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு பெற்றது.

இவ்வாறான நிலையில் தொடரின் நான்காவது முக்கியமான, தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் 2 தமிழக வீரர்களுக்கு ஒரே தடவையில் டெஸ்ட் அணியில் அறிமுகம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300வது டெஸ்ட் வீரராக தமிழகத்தை எதிரான தங்கராசு நடராஜனும், 301 ஆவது டெஸ்ட் அறிமுகம் பெறும் தமிழக வீரரான சுழற்பந்துவீச்சாளர் வோஷிங்டன் சுந்தரும் இப்போட்டியில் அறிமுகம் பெற்று கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் டெஸ்ட் அறிமுகம் பெற்று விளையாடிய நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசியதன் மூலம், டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையிலேயே இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நடராஜன் அறிமுகமான சுற்றுப் பயணத்திலேயே மூன்று போட்டிகளிலும் இடம்பெற்று ஒரு சாதனையைப் படைத்துள்ளார். நடராஜன் இன்றைய போட்டியில்ல் விளையாடுவதற்கு மிக முக்கியமான ஒரு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா காணப்படுகிறார். அவர் அவுஸ்ரேலிய அணியுடன் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு உள்ளானதன் அடிப்படையிலேயே நடராஜனுக்கு இவ்வாறு 4-வது போட்டியில் விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோன்று சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும் மூன்றாவது டெஸ்டில் உபாதைக்கு உள்ளானதன் அடிப்படையில் 4-வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரரான வோஷிங்டன் சுந்தருக்கு டெஸ்ட் அறிமுகம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. பார்க்கலாம் இவர்கள் இருவரும் தங்களது கன்னி டெஸ்ட் போட்டியில் எவ்வாறு விளையாடப்போகிறார்கள் என்பதை.

https://twitter.com/i/status/1349864377176920065

https://twitter.com/i/status/1349863334938513409

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *