ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணியுடன் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான குறித்த டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை அணி இறுதியாக தென்னாரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரை முழுமையாக இழந்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே இலங்கை அணி தோல்வியை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும், இரசிகர்களுக்கு வெற்றிபெற்று விருந்தளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. ஆனால் போட்டியின் முதல் நாளே அப்படியே மாறிப் போனது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பிரகாசிக்க த வ று இருந்தார்கள்.
போட்டியில் ஒரு வீரரும் கூட 30 ஓட்டங்களை கடக்காத நிலையில் இலங்கை அணி 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் முதல் நாளிலேயே களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 128 ஓட்டங்களை பெற்றிருந்தது. வரும் இரண்டு விக்கட்டுகளை மாத்திரம் இங்கிலாந்து அணி இழந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லஹிரு திரிமானே போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் அவர் 143 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த சராசரியை கொண்ட துடுப்பாட்ட வீரராக மாறியிருக்கிறார். வெளியிடப்பட்டிருக்கின்றன புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் லஹிரு திரிமானே 37 டெஸ்ட் போட்டிகளில் 70 இன்னிங்ஸ்களில் 1,412 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதில் ஒரு சதம் மற்றும் 6 அரைச் சதங்களை அவர் பெற்றுள்ளதுடன் 9 போட்டிகளில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து உள்ளார். இதனடிப்படையில் தற்போது லஹிரு திரிமானே 22.06 சதவீத சராசரியை கொண்ட வீரராக மாறி குறித்த குறைந்த சராசரி கொண்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
இதன் மூலம் 22.07 என்ற சராசரியை கொண்டிருந்த பங்களாதேஷ் வீரர் ஜாவிட் ஒமரின் மோ ச மா ன சாதனை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அவர் 2001 – 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.