மருத்துவமனையில் விராட் கோஹ்லி.. திடீரென அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு !! காரணம் என்ன ?

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் விராட் கோஹ்லியை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்க கூடிய, அனைவருடைய வாயிலும் பேசப்படக்கூடிய ஒரு பெயராக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் பெயர் காணப்படுகிறது. விராட் கோஹ்லி பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடித்தார். இவ்வாறான நிலையில் விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த 11ஆம் திகதி ஒரு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்த செய்தியும் நாம் அனைவரும் தெரியக்கூடிய ஒரு செய்தியாக அமைந்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் விராட் கோஹ்லி தற்போது வைத்தியசாலையின் பாதுகாப்பை அதிகரித்து இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து விராட் கோஹ்லி – அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை கிடைத்தது. இருவரும் தங்கள் பச்சிளம் குழந்தையின் தனியுரிமையை பாதுகாக்க விரும்புவதன் அடிப்படையிலேயே இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் – பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் தங்களது குழந்தையை பார்க்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறந்த செய்தியை விராட் கோஹ்லி சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். இவ்வாறான நிலையில் விராட் கோஹ்லியின் அழகான பெண் குழந்தையை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இருந்தாலும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களுக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதற்கு நீண்ட காலமாகலாம். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விடயங்களை சமூக ஊடங்களில் வெளியிடுவதற்கு விராட் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் ஒருபோதுமே தயங்கியதே கிடையாது. ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் சற்று தயக்கம் காட்டுவதாகவே இருக்கிறது. இந்த விடயத்தினை அவர்கள் தங்களுடைய திருமண விவகாரத்திலும் நிரூபித்தனர். இருவரும் ரகசியமாக காதலை வைத்து இருந்த நிலையிலேயே திடீரென அவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

இவ்வாறான நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமான செய்தியும் சற்று மறைமுகமாகவே இருந்த நிலையிலேயே பின்னர் அது வெளியானது. இது ஒரு பக்கம் இருக்கின்றன நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்த மும்பை அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களுடைய நெருங்கிய உறவினர்களை கூட வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அனுஷ்கா சர்மாவின் உடைய அறைக்கு பக்கத்தில் உள்ளவர்கள் கூட குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட முடியாத அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. தங்கள் உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரிடமிருந்து குழந்தைகளுக்கான எந்த ஒரு பரிசுகளையும் இவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் புதிதாக பிறந்த குழந்தையின் தனியுரிமையை பாதுகாக்க விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்கள் மகளின் படத்தை எடுக்க வேண்டாம் என அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *